உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முக்கியம் நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட்

முக்கியம் நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட்

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் இருந்து காரைக்குளம் செல்லும் அரசு பஸ் நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை நிறுத்தத்தில் நின்று ஏற்றாமல் சென்றதால் டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.அருப்புக்கோட்டையில் இருந்து காரைக்குளம் செல்லும் அரசு பஸ்சில் பள்ளிமடம் அருகே காலை நுாறு நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் மண்வெட்டி, கத்தி, கடப்பாரை போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு வரும் போது ஓரமாக பாதுகாப்பாக வையுங்கள் என பலமுறை கண்டக்டர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர்கள் அவ்வாறு செய்யாததால் ஜூலை 24ல் பள்ளி மடம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் பஸ் சென்றது. திரும்பி வரும் போது மக்களை பஸ்சை மறித்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து விசாரித்த நிலையில் கண்டக்டர் பாலகிருஷ்ணன், டிரைவர் சிவக்குமார் ஆகிய இருவரையும் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி