மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர், : தென்காசி லோக்சபா தொகுதியில் 2019 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டுகள் அதிகம் பெற்று, வித்தியாசம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டுகள் குறைவாக பெற்று வித்தியாசம் அதிகமாக இருந்தது.2019 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தனுஷ் குமார் 4 லட்சத்து 76 ஆயிரத்து 156, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி 3 லட்சத்து 55 ஆயிரத்து 389, நாம் தமிழர் கட்சி மதிவாணன் 59 ஆயிரத்து 445 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர்.ஆனால், தற்போதைய தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராணி 4 லட்சத்து 25 ஆயிரத்து 679, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480, பா. ஜ., வேட்பாளர் ஜான்பாண்டியன் 2 லட்சத்து 8 ஆயிரத்து 825, நாம் தமிழர் வேட்பாளர் இசைமதிவாணன் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 335 ஓட்டுகள் பெற்றுள்ளனர்இதில் கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தனுஷ் குமார் 4.76 லட்சம் ஓட்டுகள் பெற்று 1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போதைய தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராணி கடந்த முறையை காட்டிலும் சுமார் 50,000 ஓட்டுகள் குறைந்து 4 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற நிலையில், கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலாக 71 ஆயிரம் ஓட்டுகள் பெற்று ஒரு லட்சத்து 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த தேர்தலில் 3 லட்சத்து 55 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய கிருஷ்ணசாமி தற்போதைய தேர்தலில் 2 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஓட்டுகள் குறைந்துள்ளது.கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 59 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 70 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகும்.
3 hour(s) ago
3 hour(s) ago