உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்

விருதுநகரில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்

விருதுநகர்: மேற்கு வங்க மாநிலம்கோல்கட்டாவில் பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை, நியாயம் கிடைக்கவும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்க போதிய வசதிகள், பாதுகாப்பு இல்லை.மேலும் பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணியில் தங்குமிடங்கள் நல்ல நிலையிலும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவக்கழகம், மருத்துவ மாணவர்கள், பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சார்பில் சங்க மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் அனைத்து மருத்துவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.இதில் செயலாளர்கள் கணேஷ், பழனிசாமி, ஆரோக்ய ரூபன் ராஜ், பொருளாளர் ஜெயராமன், நிர்வாகிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள், அனைத்து அரசு மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதன் பின்பு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அருப்புக்கோட்டை முக்கு ரோடு வரை மனித சங்கிலியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் கூட்டாக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை