| ADDED : ஆக 15, 2024 04:39 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 30 வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளது.இதில் பொறியியல் பிரிவில் 36வது இடமும், இந்திய அளவில் அனைத்து பிரிவில் 50வது இடமும், வேளாண்மை துறையில் 38வது இடத்தையும் இப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.இதற்காக பாடுபட்ட துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்களை வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் பாராட்டினர்.