உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரும்பு வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு--: 6 பேர் மீது வழக்கு

இரும்பு வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு--: 6 பேர் மீது வழக்கு

ராஜபாளையம்: சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபாகரன் 46, பழைய இரும்பு வியாபார கடை வைத்துள்ளார். 2017ல் இவருடன் சேர்ந்து 7 பேர் மீது திருட்டுப் பொருட்கள் வாங்கியதாக விருதுநகர் ஊரக போலீசில் வழக்குள்ளது. இவரிடம் ஏற்கனவே வேலை பார்த்த தளவாய்புரத்தைச் சேர்ந்த மாடசாமி பனங்கருப்பட்டி, தேன் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பதாக பணம் கொடுத்துள்ளார். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டிற்கு பிரபாகரன் தனது நண்பர் தர்மசீலனுடன் தேன் ,பனங்கருப்பட்டியை வாங்க வரச் சொல்லியுள்ளார். அங்கு வந்தவர்களை மாடசாமி டூவீலரில் அழைத்துச் சென்று திருநெல்வேலி ரோட்டில் நின்ற காரில் ஏற்றிச் சென்றார். மாடசாமியுடன் ஏற்கனவே காரில் இருந்த மாரியப்பன், மற்றொரு மாடசாமி மூவரும் சேர்ந்து மிரட்டி ரூ.48,000, கை கடிகாரத்தை பறித்ததுடன் தளவாய்புரத்தில் உள்ள மாடசாமி வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். அங்கு மேலும் மூவர் சேர்ந்து இருவரையும் அடித்து காயப்படுத்தி ஏ.டி.எம் கார்டை பறித்ததுடன் புரோ நோட்டில் கையெழுத்து வாங்கி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். காயம் பட்ட இருவரும் துரத்துக்குடியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். ஆறு பேர் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை