| ADDED : ஜூலை 09, 2024 04:39 AM
நரிக்குடி: நரிக்குடியில் உள்ள வீரசோழன் வாரச்சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் ஆணையின்படி, மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் ஹேமலதா ஆலோசனை வழங்க, இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலில், விருதுநகர் தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிசெல்வி தலைமையில் வீரசோழன் வாரச் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு காய்கறிகள், பழங்கள் வியாபாரிகளிடம் முத்திரையிடாமல் வைத்திருந்த 16 மின்னணு தராசுகள், 16 மேடை தராசுகள், 7 வட்ட தராசுகள், 2 படிக்கற்கள், 36 எடைக் கற்கள், 5 ஊற்றல் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.உதவி கமிஷனர் மைவிழிசெல்வி கூறுகையில், 'எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, முதல் குற்றச்சாட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், இரண்டு, அதற்கடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும் விதிக்க வழிவகை உள்ளது. ஜூன் 30க்குள் மறுமுத்திரையிடப்பட வேண்டிய எடையளவுகளுக்கான கால அளவு ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் www.tn.labour.gov.inல் விண்ணப்பித்து எடையளவுகளை மறுமுத்திரையிட்டுக் கொள்ளலாம்' என்றார்.விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், உசிலம்பட்டியை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.