உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி

மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி

காரியாபட்டி: காரியாபட்டி இலுப்பைகுளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப் பள்ளி பயிற்சி நடந்தது. பயறு வகை பயிர்களை அறுவடை செய்வது, சேமிப்பு, விற்பனை முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துக்கருப்பன் அறுவடை விற்பனை முறைகள் குறித்து பேசினார். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பயன்பாடு, இருப்பு வைத்தல் குறித்து திட்ட ஆலோசகர் ராசு பேசினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உழவர்களிடையே கூட்டு விவசாயம், மதிப்பு கூட்டல் விற்பனை குறித்து சர்வோதயா அறக்கட்டளை இயக்குனர் உலகநாதன் பேசினார்.மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அறுவடை பொருட்கள், மதிப்பு கூட்டு விற்பனை செய்தல், கூடுதல் லாபம் பெறுவது குறித்து ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் பேசினார். பயிற்சிகளை உதவி தொழில்நுட்ப வல்லுநர்கள் அருண்குமார், கணேஷ்குமார் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை