| ADDED : ஏப் 02, 2024 06:37 AM
சாத்துார் : சாத்துார் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 24ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடந்தது.ரிஷபம் சப்பரம், சிம்மம் வாகனம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.இரு கோயில்கள் முன்பும் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இரவு ஒரு மணி அளவில் பூக்குழித்திருவிழா காளியம்மன் கோயில் முன்பு நடந்தது.ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர் பக்தர்களுக்கு படையல் சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. சாத்துார் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா குழுவினர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.