உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கணவருடன் விருந்துக்கு வந்த புதுப்பெண் மாயம்

கணவருடன் விருந்துக்கு வந்த புதுப்பெண் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:தேனி மாவட்டம் சின்னமனூரில் திருமணம் முடிந்து சில நாட்களான நிலையில் கணவருடன் விருந்துக்கு வந்த புதுப்பெண் கவுசல்யா 30, ஸ்ரீவில்லிபுத்தூரில் மாயமானார் .தேனிமாவட்டம் சின்ன மனூர் தாலுகா வென்னியர் கிராமத்தை சேர்ந்தவர் லெனின் 32.எஸ்டேட் பணியாளர். இவருக்கும் விருதுநகர்மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் ஜூன் 16ல் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் கூமாபட்டிக்கு விருந்துக்கு வந்த இருவரும் காரில் ஆண்டாள் கோயிலுக்கு வந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகில் காரை விட்டு இறங்கிய கவுசல்யா, காரை பார்க்கிங் செய்து விட்டு வருமாறு கணவரிடம் கூறியுள்ளார். அதன்படி கணவரும் காரை பார்க்கிங் செய்து விட்டு வந்து பார்க்கும்போது கவுசல்யாவை காணவில்லை.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி