உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் கணினி பயன்பாடு அறிவியல், தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு இளம் படைப்பாளிகள் திட்டத்தை செயல்படுத்த ஜோஹோ கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் கையெழுத்தானது.ஒப்பந்தத்தில் துணைவேந்தர் நாராயணன், ஜோஹோ நிறுவன நிதி மேலாளர் பத்ரிநாத் ராஜன் கையெழுத்திட்டனர். பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நடந்த இளம் படைப்பாளிகள் திட்ட செய்முறை கருத்தரங்கில் ஜோஹோ நிறுவன அதிகாரிகள் அஸ்வின், ஆதித்யா, ஸ்ருதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் பிரதீப் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி