உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடமாறுதல் கவுன்சிலிங்கால் பணிச்சுமை அதிகரிப்பு நுண்கதிர் பிரிவு சங்கம் குற்றச்சாட்டு

இடமாறுதல் கவுன்சிலிங்கால் பணிச்சுமை அதிகரிப்பு நுண்கதிர் பிரிவு சங்கம் குற்றச்சாட்டு

விருதுநகர்:'அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நுண்கதிர் பிரிவில் புதிய பணியிடங்களை நிரப்பாமல், ஊழியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது' என, தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் என்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஞானதம்பி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தமிழக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஏற்கனவே ரேடியோலாஜிகல் பிரிவில் 750 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதால் பலர் மாறுதல் பெற்று சென்று விட்டனர். அந்த இடங்கள் பல காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மருத்துவக்கல்லுாரியில் பணியாற்றுபவர், கூடுதலாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையையும் சேர்த்து பார்க்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட பயணப்படி தற்போது வழங்கப்படுவதில்லை. கூடுதல் பணியிடத்திற்கு ஒரு நாளைக்கு 50 கி.மீ., சென்று வரும் நிலை உள்ளது.எனவே அரசு மருத்துவமனைகளில் ரேடியோலாஜிகல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை