உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுது

திருத்தங்கல் நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுது

சிவகாசி: திருத்தங்கலில் நீரேற்று நிலையத்தில் ஒன்றரை மாதமாக மோட்டார் பழுதால் நகர் முழுவதும் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் மானுார் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இங்கு சேகரிக்கப்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்படும். அதன்படி நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வந்து விடுகின்றது. ஆனால் இங்கு ஒன்றை மாதங்களாக மோட்டார் பழுதால் குடிநீர் மற்ற தொட்டிகளுக்கு ஏற்ற முடியவில்லை. இதனால் நகரில் பெரும்பான்மையான பகுதிகளுக்கு 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மக்கள் குடிநீரை மீண்டும் விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அதே நேரம் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் வெளியேறி வீணாக செங்குளம் கண்மாயில் கலக்கின்றது. கடந்த காலங்களில் திருத்தங்கலில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மோட்டார் பழுதால் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மோட்டாரை சரி செய்து சீரான குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை