உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோர திறந்த நிலை கிணற்றால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ரோட்டோர திறந்த நிலை கிணற்றால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டில் கண்ணக்குடும்பன்பட்டி அருகே ரோட்டோரத்தில் உள்ள திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தடுப்பு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை ரோட்டில் கண்ணக் குடும்பன்பட்டி அருகே ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. இதனைக் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த கிணறு ரோட்டில் வளைவு பகுதியில் உள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த இந்த கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் கிணற்றில் தண்ணீர் உள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இங்கு கிணறு இருப்பதே தெரியாது. இதனை கடந்து செல்கின்ற டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். சற்று கவனம் சிதறி கிணற்றில் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக இங்கு அடையாளத்துடன் கூடிய தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி