உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலை பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

சாலை பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

விருதுநகர்:'சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், வரும் 10ல் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்; 19ல் மண்டல அளவில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்; செப்., 17ல் திண்டுக்கல் மாநில மாநாட்டில் துவங்கி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால், 3,321 சாலை பணியாளர்கள், 311 ஆய்வாளர்களுக்கு பணி பாதிப்பு ஏற்படும். மாநில நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ முதல் 60 கி.மீ.,க்கு ஒரு டோல்கேட் அமைத்து, தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு உண்டாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்