உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சென்டர் மீடியனில் மோதி ஒருவர் பலி

சென்டர் மீடியனில் மோதி ஒருவர் பலி

விருதுநகர், : விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் வந்த இருவர் சென்டர் மீடியனில் மோதி நிலை தடுமாறி விழுந்ததில் சந்தோஷ் 26, பலியானார்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், பாலாஜி 21. இவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மதுரையில் நிறுவனத்தின் புதிய கிளை திறக்க உள்ளதால் டூவீலரில் ( ஹெல்மட் அணிந்திருந்தனர்) வந்து பார்வையிட்டு விட்டு நாகர்கோவில் செல்வதற்காக விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை எதிரே வந்தனர்.அப்போது சென்டர் மீடியனில் மோதி நிலை தடுமாறி விழுந்ததில் சந்தோஷ் சம்பவயிடத்திலேயே பலியானார். காயமடைந்த பாலாஜி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ