உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேளானுாரணியில் பள்ளி திறக்க கோரி மறியல்

வேளானுாரணியில் பள்ளி திறக்க கோரி மறியல்

திருச்சுழி, : திருச்சுழி அருகே வேளானுாரணி கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி அமைக்க கோரி பெற்றோர், மாணவர்கள் ரோடு மறியல் செய்தனர்.திருச்சுழி அருகே வேளானுாரணி கிராமத்தில் அரசு துவக்க பள்ளி அமைக்க கோரி 25 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் 3 கி.மீ., தொலைவில் உள்ள இலுப்பையூர் அரசு உதவி பெறும் பள்ளி மட்டும் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் இந்த பள்ளிக்கு செல்ல வேன் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் உள்ளனர். கட்டணம் செலுத்த முடியாததால் 3 கி.மீ., திருச்சுழி-கமுதி ரோட்டில் நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழை காலமானால் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று கிராமத்து மக்கள் மாணவர்கள் திருச்சுழி - - கமுதி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஜெகநாதன் மறியல் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை மக்கள் கைவிட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை