உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓடைகளை துார்வாராததால் ரோட்டில் தேங்கும் மழைநீர்

ஓடைகளை துார்வாராததால் ரோட்டில் தேங்கும் மழைநீர்

விருதுநகர்: விருதுநகரில் ஓடைகளை துார்வாராததால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நாட்கணக்கில் மழைநீர் தேங்குகிறது.விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடிகால் வசதி குறிப்பிட்ட, கடை, குடியிருப்பை பகுதிகளை யொட்டி மட்டுமே உள்ளது.காலி நிலங்கள் அருகே கிடையாது. அவை நேரடியாக மண்ணுக்குள் சென்று விடுகின்றன. ஆனால் கடை, குடியிருப்பு அருகே உள்ள வடிகால்கள் சரிவர பராமரிக்காததால் அவை புதர்மண்டி மோசமான நிலையில் உள்ளன.ஓடைகளை சரிவர துார்வாராததால் அவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மேலும் அருகே உள்ள கடைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதால் துர்நாற்றமும் வீசுகின்றன. மூடாமல் திறந்த நிலையில் உள்ள வடிகால்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றை ஏற்படுத்துகின்றன.இந்நிலையில் சிவகாசி ரோடு நான்கு வழிச்சாலை பாலம் சர்வீஸ் ரோட்டில் ஓடை குப்பையால் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெய்த மழைநீரானது வடியாமல் நாட்கணக்கில் ரோட்டிலே தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்