உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி சிவன் கோயிலில் வடக்கு வாசலை மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவாமி வாகனங்கள் அகற்றம்

சிவகாசி சிவன் கோயிலில் வடக்கு வாசலை மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவாமி வாகனங்கள் அகற்றம்

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வடக்கு வாசலை மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவாமி வாகனங்கள் அகற்றப்பட்டது. மேலும் புடைப்புச் சிற்பங்கள் வெளியில் தெரியும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஏப்ரலில் நடந்து முடிந்தது. கோயில் உள்ளே கன்னிமூல கணபதி சுவாமி அருகே சுவாமி ஊர்வலமாக வரும் வாகனங்கள் பாதுகாப்பாக அமைப்பதற்காக செட் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாகனங்கள் அங்கே வைக்கப்படாமல் 90 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட வடக்கு வாசலை மறைத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. வடக்கு வாசலில் அமைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் மறைக்கப்பட்டிருந்தது. இதுபோன்று கோயிலில் பல்வேறு பிரச்னைகளால் சிவ பக்தர்கள் வருத்தத்தில் இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் வடக்கு வாசலை மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவாமி வாகனங்கள் அதற்கான இடத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் புடைப்புச் சிற்பங்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நீக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ