உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் கேட்டு ரோடு மறியல்

குடிநீர் கேட்டு ரோடு மறியல்

விருதுநகர் : விருதுநகர் செங்குன்றாபுரம் அருகே சின்னப்பரெட்டியபட்டியில் குடிநீர் கோரி அம்மக்கள் அழகாபுரி ரோட்டில் மறியல் செய்தனர்.சின்னப்பரெட்டியபட்டியில் ஆழ்துளை அமைத்து மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மோட்டார் பழுது காரணமாக 5 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று விருதுநகர் - ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் அழகாபுரி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.அரை மணி நேரம் வரை நீடித்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் காளியம்மாள் மோட்டாரை சரிபார்த்து விரைவில் குடிநீர் வழங்குவதாக கூறியதை அடுத்து அவ்வூர் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி