உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஜாருக்குள் வலம் வந்த சரத்குமார்

பஜாருக்குள் வலம் வந்த சரத்குமார்

விருதுநகர் : விருதுநகர் மெயின் பஜாருக்குள் நேற்று பா.ஜ., சரத்குமார் வலம் வந்து மக்களை சந்தித்தார்.நேற்று மாலை 4:00 மணிக்கு விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு கட்சியினர், துணை ஆட்கள் யாருமின்றி தானே வந்தார். அம்மனை வழிபட்டு விட்டு பஜாருக்குள் சென்றார். ஒவ்வொரு கடைகளாக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் அனைவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். துாய்மை பணியாளரில் துவங்கி கடை வியாபாரிகள் என பலரும் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். தொகுதி தேவைகளை கேட்டறிந்து, நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். மக்கள் பலர் சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ