உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; வாறுகால் துார்வாரும் பணிகளில் தொய்வு

துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; வாறுகால் துார்வாரும் பணிகளில் தொய்வு

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் வாறுகால் துார்வாருதல், குப்பை சேகரித்தல் போன்ற சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமித்து சுகாதாரப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் ஒன்று முதல் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் 153 தெருக்கள் உள்ளன. திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்கின்படி 55 ஆயிரம் பேர் வசித்தனர். இந்த மக்கள் தொகையின் படி இங்கு 227 துாய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.ஆனால் அப்போதே 30 நிரந்தர துாய்மை பணியாளர்களும், 50 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை பார்த்து வந்தனர்.இதனால் வாறுகால் துார்வார, குப்பை சேகரிக்க பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சி 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியோடு இணைந்தது. தற்போது திருத்தங்கலில் 75 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு குறைந்தது 500 துாய்மை பணியாளர்கள் பணி புரிய வேண்டும். ஆனால் இப்போதும் 32 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 40 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர்.இதனால் வழக்கம் போலவே துாய்மைப் பணியில் தொய்வு ஏற்படுகின்றது. பெரும்பான்மையான தெருக்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் வாறுகால் துார்வாரப்படுகின்றது. மேலும் குப்பை சேகரிக்கவும் வழியில்லாமல் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது. இதனால் சுகாதாரத் கேடு ஏற்படுகின்றது. எனவே திருத்தங்கலில் கூடுதல் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப் பணியினை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ