உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அக்கா கொலை: தம்பிக்கு ஆயுள்

அக்கா கொலை: தம்பிக்கு ஆயுள்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி ரமேஷ் 54, கூலித் தொழிலாளி. இவரது அக்கா பாஞ்சாலி 58. சொத்து தகராறில் பாஞ்சாலியை 2022 மே 3ல் ரமேஷ் கொலை செய்தார்.போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது சாட்சி ஒருவரை மிரட்டியதாக ரமேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளின் விசாரணையும் ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கொலை வழக்கில் ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சாட்சியை மிரட்டிய வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !