| ADDED : ஜூன் 18, 2024 06:55 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளை ராஜபாளையம் நகராட்சி உடன் இணைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டுமென எம்.எல்.ஏ. மான்ராஜ். கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து தமிழகஅரசின் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது;புதிதாக அறிவிக்கப்பட உள்ள ராஜபாளையம் மாநகராட்சி எல்லை விரிவாக்க பணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடையன்குளம்,படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சிகளை இணைத்தால் 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிது பாதிக்கப்படுவார்கள்.விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் சொத்து வரி உட்பட பல்வேறு வரியினங்கள் அதிகரிக்கும் அபாயமும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ராஜபாளையம் மாநகராட்சியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என அதில் குறிப்பிட்டுள்ளார்.