காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவன் மீது விழுந்த சூரிய வெளிச்சம்
காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவகாமி அம்மாள் அம்பலவாணர் கோயிலில் மகா சிவராத்திரி நேற்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை சூரிய வெளிச்சம் சுவாமி விழுந்தை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவகாமி அம்மாள் அம்பலவாணர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இக்கோயிலில் சிவகாம புஷ்கரணி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அம்பலவாணரை வழிபட்டு ராவணனை திருமணம் செய்யும் பாக்கியத்தை மண்டோதரிக்கு சிவபெருமான் கொடுத்த புண்ணிய ஸ்தலம்.இக்கோயிலில் மகாசிவராத்திரி அன்று காலை சூரிய பகவான் ஒளி கதிர் நந்தி பகவானை வணங்கி, சிவபெருமானை தரிசித்து செல்வதாக ஐதீகம். அதன் படி மகா சிவராத்திரியன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை சூரிய ஒளி கதிர்களால் அம்பலவாணரை ஆரத் தழுவி, தரிசனம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதை பார்த்து' ஓம் நமச்சிவாய 'என கரகோஷம் எழுப்பி பக்திபரவசம் அடைந்தனர்.