உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சுவாமி வீதி உலா

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சுவாமி வீதி உலா

திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சாமி, அம்மன் வீதி உலா வந்தனர்.திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் விழாவில், 6ம் நாள் விழாவாக திருமேனிநாதர், துணை மாலையம்மன் அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு கருப்பசாமி கோயில் வழியாக சென்று நகரின் முக்கிய வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை