மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
காரியாபட்டி: மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளி கல்வித் துறைக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்தார். காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியை காஞ்சனா (பொறுப்பு) தலைமையில் நடந்தது. சி.இ.ஓ., அசோக் குமார் (பொறுப்பு) வரவேற்றார். விலையில்லா சைக்கிளை மாணவிகளுக்கு வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளி கல்வி துறைக்கு தான் ரூ. 44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்தால் தான் நாட்டினுடைய முன்னேற்றம் இருக்கும் என்பதை உணர்ந்து அதிகளவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 726 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் காரியாபட்டி பள்ளியில் 360 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த காரியாபட்டி பள்ளி மாணவிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். டி.இ.ஓ., இந்திரா நன்றி தெரிவித்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago