உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றம்

திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றம்

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. புராதான சிறப்புமிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை செங்கமலதாயார், நின்ற நாராயணப்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடந்தது. கருட கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்து பட்டர் தலைமையில் வெங்கட்ராம பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சேமம், கருடன், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா நடக்கிறது. ஜூன் 21ல் இரவு கருட சேவையும், ஜூன் 23 இரவு சயன சேவையும் நடக்கிறது. ஜூன் 25ல்காலை 8:05 மணிக்கு ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ