உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முறிந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்  மின்கம்பம்

முறிந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்  மின்கம்பம்

விருதுநகர் : விருதுநகர் பாத்திமா நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதமாகி எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய மின்கம்பத்தை நிறுவ வேண்டும்.பாத்திமா நகர் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க அதே பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கும் மின் கம்பங்கள் சேதமாகி விரிசல் ஏற்பட்டுள்ளது. இவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அவ்வழியாக செல்வதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்துள்ளது.மின்கம்பம் முறிந்து விழுந்தால் டிரான்ஸ்பார்ம் கிழே விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரின் மின் துாண்களை மாற்றி, கம்பி வேலிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை