உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் மலையேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்த வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. இது வன ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக பகுதியில் யானைகள், மான்கள், கரடிகள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. மேலும் மலையில் அரிய வகை மூலிகைகளும் காணப்படுகிறது. மழை பெய்யும் நேரங்களில் பேயனாற்றில் நீர்வரத்து காணப்படுகிறது.இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் செண்பகத் தோப்பு பகுதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.இந்நிலையில் தமிழக வனத்துறை மாநிலத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் சூழல் சுற்றுலா திட்டத்தின் மேல் மலையேற்றம் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளது.இதில் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வ.புதுப்பட்டி வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை ஆர்வலர்களை மலையேற்றம் எனும் டிரக்கிங் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை