உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் ஸ்டேஷனிலேயே புதரில் மண்டும் டூவீலர்கள்

போலீஸ் ஸ்டேஷனிலேயே புதரில் மண்டும் டூவீலர்கள்

விருதுநகர் : விருதுநகரில் போலீஸ் ஸ்டேஷனிலே கிடந்த புதர்மண்டும் டூவீலர்களால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பதுடன், அவை பழுதாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.விருதுநகர் கிழக்கு ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில்விபத்து விதிமீறல், குற்ற வழக்கு தொடர்பில் ஏதேனும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை கிழக்கு ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன. இவை நீண்ட ஆண்டுகளாக நிறுத்தப்படுவதால் துருப்பிடித்து பயன்பாடின்றி போகிறது. மேலும் ஸ்டேஷனை யொட்டி உள்ள காலிநிலத்தில் முட்செடிகள், கொடிகள் வளர்ந்து புதர்மண்டுவதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரிக்கம் வாய்ப்புள்ளது.ஆண்டுதோறும் ஆயுதப்படை மைதானத்தில் பல்வேறு வாகனங்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. ஆனால் அந்த போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் மட்டுமே அதற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இது போன்ற புதர்மண்டிய வாகனங்களின் நிலை கிடப்பில் போடுவதா தான் உள்ளது. இதற்கு அவற்றை புதர்மண்டாமல் இருக்க செய்வதுடன், பாகங்கள் துருப்பிடிக்காதவாறு மர நிழலில் நிறுத்தினால் இந்த சிக்கல் தவிர்க்கப்படும். எனவே கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புதர்மண்டி மோசமான நிலையில் வாகனங்கள் கிடப்பதை சரி செய்ய வேண்டும். அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி