| ADDED : மார் 24, 2024 01:13 AM
சிவகாசி : சாத்துார், நரிக்குடி, சிவகாசியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6.29 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.சாத்துார் ஊஞ்சம்பட்டி, வல்லம்பட்டி, சிவகாசி ரோட்டில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி டூவீலர்,கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து79 ஆயிரத்தை பறிமுதல் செய்து தாசில்தார் லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.* சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த சிவகாசியை சேர்ந்த ஆறுமுகத்தை 45, சோதனை செய்கையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ. 66 ஆயிரத்து 650 இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.* நரிக்குடி முக்கு ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வள்ளி நாயகம் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் வந்த மினி வேனை சோதனை செய்ததில் கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை தாலுகா, நரியூர் மேலபுத்தான் வீடு பகுதியைச் சேர்ந்த வைக்கோல் வியாபாரி சுகுமாறன் நாயர் பார்த்திபனூர் பகுதியில் வைக்கோல் கொள்முதல் செய்வதற்காக ரூ.84 ஆயிரம் கொண்டு வந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 84 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சுழி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.