| ADDED : ஜூன் 25, 2024 12:09 AM
சாத்துார் : சாத்துாரில் மது போதையில் வேனை ஓட்டி 11 பேர் காயமடையவும் ஒருவர் உயிரிழப்புக்கும் காரணமான வேன் டிரைவர் நாராயணனுக்கு 50, சாத்துார் சார்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் நாராயணன் , 2014 ஏப். 4 ல் மதியம் 12:00 மணிக்கு மது போதையில் இவர் சாத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுபோதையில் வேனை ஓட்டிச் சென்று ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் சென்றவர்கள் மீது மோதினார். இதில் கே.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேணுகோபால், 63. சம்பவ இடத்தில் பலியானார்.மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரனை சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. உதவி அமர்வு நீதிபதி முத்துமகாராஜன், வேன் டிரைவர் நாராயணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சாத்துார் போலீசார் நாராயணனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.