உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டா கேட்டு சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

பட்டா கேட்டு சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

சிவகாசி: சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழி வீட்டுமனை பட்டா வழங்க கோரி பூவநாதபுரம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே பூவநாதபுரம் இந்திரா நகர் காலனியில் 34 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1998 ல் இலவச வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி மக்கள் வசித்து வருகின்றனர். இடத்திற்கு பதிவேடு, தமிழ் நில இணையதள வருவாய் கணக்குகளில் அரசு புறம்போக்கு ஆதிதிராவிடர் நத்தம் என்ற பெயர் மாற்றம் செய்து இணைய வழி பட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்து இரு ஆண்டுகளாகியும் பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் பூவநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை