உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கழிவு பட்டாசு: வாலிபர் காயம்

கழிவு பட்டாசு: வாலிபர் காயம்

சிவகாசி: சிவகாசி அருகே சேதுராமலிங்காபுரம் சேர்ந்தவர் மாரீஸ்வரன் 38. இவருக்கு அதே பகுதியில் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற எஸ்.ஆர்.எம்., பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் சல்வார் பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் 32, நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள ஆற்றின் ஓரத்தில் பட்டாசு கழிவுகளை கொளுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவு பட்டாசு வெடித்ததில் மாரீஸ்வரன் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்