உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு

 ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி , பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு 108 போர்வை சாற்றி, வாசுதேவ பட்டர், ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பாலமுகுந்தனின் அரையர் சேவையும், வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தலும் நடந்தது. பின்னர் நேற்று காலை 9:00 மணி வரை நடந்த உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை