| ADDED : மார் 02, 2024 04:36 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் டூ பொதுத்தேர்வு துவங்கியது. தமிழ் தேர்வில்417 பேர் ஆப்சென்ட் ஆகினர்.2023--2024 ஆம் ஆண்டுக்கான பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 22 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 98 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். 10 ஆயிரத்து 30 மாணவர்களும், 11 ஆயிரத்து 760 மாணவிகளும் என 21 ஆயிரத்து 790 பள்ளி மாணவர்கள் தேர்வெழுத இருந்த நிலையில் மாணவர்களில் 221 பேர், மாணவிகளில் 196 பேர் என 417 பேர் ஆப்சென்ட் ஆகினர்.9809 மாணவர்கள், 11 ஆயிரத்து 564 மாணவிகள் என 21 ஆயிரத்து 373 பேர் தேர்வெழுதினர். பிரெஞ்சு பாடத்தில் விண்ணப்பித்திருந்த24 பேரும்தேர்வெழுதினர்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 5 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 21 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நடக்கும் அனைத்து தேர்வு மையங்களில் 104 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 102 துறை அலுவலர்கள், 1495 அறைக் கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாக 155 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு பணி செய்கின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு 8 பறக்கும்படை குழுவில் 16 உறுப்பினர்கள், தேர்வு மையங்களில் 123 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கண்காணித்தனர். கலெக்டர், கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.பி., டி.ஆர்.ஓ., சப் கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்கள் என அலுவலர்களை கொண்டு அமைக்கப்பட்ட தேர்வு குழு திடீர் ஆய்வு செய்தது.