உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டி : காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், எஸ்.ஐ., அசோக் குமார் முன்னிலையில் நடந்தது.கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைப்பு வழங்குவது, அரசியல் நிகழ்ச்சிகளில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., கம்யூ., மருது சேனை, வி.சி., நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை