உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்பம் விநியோகம்

கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்பம் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2024--2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் துவக்க விழா, கலசலிங்கம் மணிமண்டபத்தில் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில் பி.டெக் இன்ஜினியரிங், அக்ரிகல்சர், ஆர்கிடெக்சர், பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., கேட்டரிங், பாரன்சிக், பி.காம். எல்.எல். பி., பி. ஏ. எல். எல். பி. போன்ற படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வேந்தர் ஸ்ரீதரன், பதிவாளர் வாசுதேவன் வழங்கினர். விழாவில் துணை வேந்தர் நாராயணன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ