உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வட மாநிலத்தவர் மீது தாக்குதல்-

வட மாநிலத்தவர் மீது தாக்குதல்-

ராஜபாளையம், : ராஜபாளையத்தில் வட மாநில தொழிலாளரை குழந்தை கடத்துபவர் என நினைத்து கிராமத்தினர் தாக்கியதில் காயமடைந்தார்.ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் மார்ச் 17 மாலை வட மாநில தொழிலாளர்கள் சிலர் தெரு வழியே வந்துள்ளனர். குடிபோதையில் இருந்தவர்களிடம் ஊர்மக்கள் விசாரித்ததில் ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடினர். சிக்கியவர் அளித்த பதில் திருப்தி இல்லாததால் குழந்தைகள் கடத்துபவர் என கருதி கிராமத்தினர் தாக்கி கீழராஜகுலராமன் போலீசிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் பீஹாரை சேர்ந்த ராம் சிஸ்ராம் 45, சிப்காட் தனியார் சோலார் நிறுவன ஒப்பந்த தொழிலாளி என தெரிந்தது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கடந்த இரண்டு மாதங்களாக வடமாநிலத்தில் இருந்து குழந்தைகளை கடத்தும் கூட்டம் உலாவுவதாக வதந்தி சுற்றி வந்ததால் அப்பாவி வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்ததாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை