உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட 47 குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்களை வழங்கினார். இந்த ஊர்வலத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.நகரின் முக்கிய வீதிகள் வழியாக விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி