உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்ய அழைப்பு 

 தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்ய அழைப்பு 

விருதுநகர்: தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் ராபி பருவத்திற்கு தோட்டக்கலை பயிர் களான வாழை, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு குறிப்பிட்ட குறுவட்டங்களில் பயிர் காப்பீடு செய்யலாம். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காப்பீட்டு தொகை ஏக்கருக்கு வாழை ரூ.4426, வெங்காயம் ரூ.1573, மிளகாய் ரூ.1109, கொத்தமல்லி ரூ.583 கட்டணம் செலுத்த வேண்டும். கொத்தமல்லி பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜன. 17, மிளகாய், வெங்காயம் ஜன. 31க்குள்ளும், வாழை பிப். 28க்குள் பதிவு செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை