உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் கக்கன் காலனியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது தந்தைக்கு 1961 ல் 5 சென்ட் இடத்தை தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது. இந்த இடத்தில் ஒரு பகுதியில் இவர் வீடு கட்டியும், மற்றொரு பகுதியை காலி இடமாகவும் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த இடத்தை விருதுநகர் வருமானவரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பளராக பணிபுரியும் பவுல் மேரி, போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்தார். இது குறித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கமுத்து சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பவுல்மேரி, அவரது மகன் ஆனந்த், மகள்கள் அபிதா, அஸ்வினி, சாட்சி கையெழுத்திட்ட திருத்தங்கலை சேர்ந்த பழனிக்கனி, அழகையா, பிச்சைக்கனி, பாண்டியராஜ், ஆவண எழுத்தர் வேலுச்சாமி ஆகிய 9 பேர் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை