உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுவர் பூங்கா சீரமைப்பு பணி மீண்டும் துவக்கம்

சிறுவர் பூங்கா சீரமைப்பு பணி மீண்டும் துவக்கம்

சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் சிறுவர் பூங்காவில் கிடப்பில் போடப்பட்ட பராமரிப்பு பணிகள் மீண்டும் துவங்கியது. சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இதில் குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இருந்த நிலையில் சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. பூங்கா முழுவதும் முட்புதர்கள் சூழ்ந்து விட்டது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு பூங்கா பராமரிக்கும் பணி துவங்கியது. இதற்காக முட்புதர்கள் அகற்றப்பட்டு பில்லர் அமைக்கும் பணி துவங்கிய நிலையில் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை.இதனால் இப்பகுதி குழந்தைகள் பெரியவர்கள் ஓய்வு எடுக்க, பொழுது போக்க இடம் இன்றி சிரமப்பட்டனர். எனவே விரைவில் பூங்கா அமைக்கும் பணியை துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தென்றல் நகர் சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மீண்டும் துவங்கியது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை