மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
28-Oct-2025
இன்றைய மின்தடை ரத்து
28-Oct-2025
தொடர் மழையால் பசுமையான மீடியன்
28-Oct-2025
போலீஸ் செய்திகள்
28-Oct-2025
வீரசோழனில் ஆக்கிரமிப்பால் சிரமம்
28-Oct-2025
அக். 31, நவ. 12ல் ஒற்றுமை அணிவகுப்பு
28-Oct-2025
ஸ்ரீவில்லிபுத்துார்:தனக்கும் தனது கணவரும் ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ.,வுமான மான்ராஜூக்கும் சிவகாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் வெங்கடேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஊராட்சி தலைவி வசந்தி, தென்மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ், இவரது மனைவி வசந்தி. விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவியாக உள்ளார். தென்மண்டல ஐ.ஜி., யிடம் அவர் அளித்த புகார்:மாவட்ட கவுன்சிலர் வேல்ராணியின் கணவரான சிவகாசி அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு இடையூறு செய்கிறார்.கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு டேபிள், சேர்கள் வழங்கியதில் 50 சதவீத கமிஷன் பெற்று, அரசு பணம் ரூ. 2 கோடி 20 லட்சம் முறைகேடு செய்துஉள்ளார். எனது கணவரிடம் பல்வேறு செக்குகள், வெற்று பத்திரங்களில் கையொப்பங்களை பெற்று வைத்துக்கொண்டு, ஜாதியை சொல்லி திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் தனது வீட்டில் பல சமூக விரோத செயலை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து வெங்கடேஷிடம் கேட்டபோது, 'நான் இதுவரை யாரையும் மிரட்டியது கிடையாது. என் மீது எந்த ஸ்டேஷனிலும் புகார் கிடையாது. கடந்த வாரம் மான்ராஜ் மீது மற்றொரு கவுன்சிலர் கணேசன் புகார் கூறிய பிரச்னையில் நான் தலையிட்டு சமாதானம் செய்தேன். அதற்குரிய பரிசாக இந்த புகாரை மான்ராஜ் தந்துள்ளார்' என்றார்.
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025
28-Oct-2025