உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஒப்பந்த மின் ஊழியர் பலியான விவகாரம் -- மின்வாரிய அலுவலர், நிறுவனம் மீது வழக்கு

 ஒப்பந்த மின் ஊழியர் பலியான விவகாரம் -- மின்வாரிய அலுவலர், நிறுவனம் மீது வழக்கு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த நிறுவன ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மின்வாரியஅலுவலர் ,ஒப்பந்த நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த சித்தாலம்புத்துாரை சேர்ந்தவர் கணேஷ் குமார் 22, புதிய மின் வழித்தடம் அமைக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று முன்தினம் ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு அருகே மின் வழித்தடம் அமைக்கும் பணிக்காக உயர் அழுத்த மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டபோது திடீரென மின் இணைப்பு வழங்கப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் முதலில் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில் வழக்கில் மாற்றம் செய்து கவனக்குறைவாக செயல்பட்டு விபத்துக்கு காரணமாக இருந்ததாக மின்வாரிய அலுவலர்கள் மீதும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதற்காக ஒப்பந்த நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை