மேலும் செய்திகள்
விதை விற்பனையில் லேபிள் அவசியம்
5 minutes ago
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி மின்வேலியை மிதித்ததால்
7 hour(s) ago
அருப்புக்கோட்டையில் அதிக மழை
23-Nov-2025
மா சில்லாத நகரை உருவாக்க வேண்டும் என்றால் அந்த நகரம் பசுமையாக இருக்க வேண்டும். பசுமை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பசுமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல். மரங்கள் வளர்ப்பதன் அவசியம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துதல், மறுசுழற்சி மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற பசுமையான நடைமுறைகளை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பசுமை என்பது காடுகள், நீர் நிலைகள், பல்லுயிர் பெருக்கம் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. மேலும் புவி வெப்பமடைதலின் விளைவுகள் மற்றும் அதை எதிர்த்துப் போராட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பது பற்றி விவாதிக்கின்றன. நகரங்களில் பசுமையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம். தற்போது உலகை உலுக்கிவரும் பிரச்னைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத்தீர்வாக நெடுங்காலத்தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை, அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம். இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். எனவே நகரை பசுமையாக மாற்றுவது என்பது அத்தியாவசியமாகிறது. அந்த வகையில் சிவகாசி ஏவிடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பள்ளி வளாகம் முழுவதுமே மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காணப்படுகிறது. மேலும் காகித வியாபாரிகள் சங்கம் பசுமை மன்றம் சார்பில் தேசிய காகித தினத்தை முன்னிட்டு வேம்பு பன்னீர் மகிழம் மந்தாரை செவ்வரளி உள்ளிட்ட மரக்கன்றுகளும் செம்பருத்தி போன்ற பூச்செடிகளும் நடப்பட்டது. இவைகள் தற்போது வளர்ந்து கண்ணுக்கு இனிமையாக காட்சியளிக்கிறது. இதனை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பராமரித்து வருகின்றனர்.
5 minutes ago
7 hour(s) ago
23-Nov-2025