உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--

நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் உள்ளதால் விபரீதம் தெரியாமல் குளியல் போடும் சிறுவர்கள் ஆபத்தை சந்திக்கின்றனர்.ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள் ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சில இடங்களில் ஆழம் இல்லை என்றாலும் அதிகமான நீர் போக்கு, சேறு உள்ளிட்ட ஆபத்துகளால் நீச்சல் தெரிந்தவராக இருப்பினும் சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.பெரியவர்களின் கண்காணிப்பின்றி சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் சிக்கி சிறுவர்கள் உயிரிழக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.விடுமுறை தினங்களில் சிறுவர்களை பெற்றோர் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிப்பதோடு பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை