விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கணினி உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தலைமை வகித்தார். மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யனசாமி, மக்கள் நலப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.