உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விலை இருந்தும் விளைச்சல் இல்லை

விலை இருந்தும் விளைச்சல் இல்லை

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி பகுதியில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை இருந்தும் மழையால் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, துலுக்கன்குறிச்சி, அம்மையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 5000 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். மக்காச்சோளம் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழை பெய்து விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. பயிர்கள் சேதத்தாலும் தண்ணீர் வெளியேறாதாலும் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.பொதுவாக பொங்கல் முடிந்தவுடன் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும். ஆனால் இந்த முறை மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த பெரும்பான்மையான நிலங்களில் தண்ணீர் தேக்கத்தால் தாமதமாகவே அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் என ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளது. நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. ஏக்கருக்கு அதிகபட்சம் 20 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் நஷ்டம் ஏற்படாவிட்டாலும் லாபம் இல்லை என்பதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.முனியசாமி, விவசாயி, செவல்பட்டி, எப்பொழுதுமே மழை இல்லாமல் தான் மக்காச்சோளத்தில் நஷ்டம் ஏற்படும். ஆனால் இந்த முறை கூடுதல் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விட்டது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நேரத்தில் ஒரு குவிண்டால் ரூ. 2200 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் லாபம் கிடைக்கவில்லை., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ