| ADDED : ஜன 26, 2024 05:03 AM
விருதுநகர்; விருதுநகரில் பிப். 2, 3 ல் மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது.திருக்குறளின் தொன்மை, மாண்பை எடுத்துக் கூறும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே திருக்குறளின் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக்கி எதிர்காலத்தை செம்மைப்படுத்தும் முயற்சியாக பிப். 2, 3ல் தேதிகளில் திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடக்கிறது.அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் திறனறி தேர்வு 2023ல் வெற்றி பெற்ற மாணவர்களில் ஆர்வமுள்ள மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். வினாடி வினா, நாடகம், நடனம், பேச்சு, கவிதை, தனிநபர் போட்டி, கலைப் போட்டி, குறள் விளையாட்டு, குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளது. வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இதற்கான இலச்சினையை கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டார்.இம்மாநாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் சென்னை வரை 5 ஆசிரியர்கள் பங்கேற்கும் சைக்கிள் பயணமும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.